Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

எம்.பி.க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Share:

நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதும், விவாதத்தில் பங்கேற்கும் போதும் கண்ணியம் குறைவான, அநாகரீகமாக வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என்று பெந்தோங் பெண் எம்.பி. யங் ஷெஃபூரா ஓத்மான் கேட்டுக்கொண்டார்.

நகைச்சுவை என்ற பெயரில் பாலியல் தன்மையில் குணக் கேடான வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதை எம்.பி.க்கள் தவிர்க்க வேண்டும். இதில் பெண் எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் என்று அந்த பெண் எம்.பி. அறிவுறுத்தினார்.

லங்காவி கடற்கரையில் அரைக்கால் சிலுவார் அணியலாமா? என்று கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் செபுத்தே பெண் எம்.பி. தெரெசா கோக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த லங்காவி எம்.பி.,முஹமாட் சுஹைமி அப்துல்லா அந்த பெண் எம்.பி.யை நோக்கி நீங்கள் எதுவும் அணியாமல்கூட வரலாம் என நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று பதில் அளித்து இருந்தார்.

அதேவேளையில் செபூத்தே பெண் எம்.பி. எதுவும் அணியாமல் வந்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன் என்று பெர்சத்து கட்சியின் 56 வயதான லங்காவி எம்.பி. . முஹமாட் சுஹைமி அப்துல்லா கூறியது மக்களவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய கண்ணியமற்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ள லங்காவி எம்.பி.யை நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் முன்னிலையில் நிறுத்த வேண்டும் என்று பெந்தோங் எம்.பி. யங் ஷெஃபுரா ஓத்மான் கேட்டுக்கொண்டார்.

Related News