Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பத்தாவது மாடி வீட்டில் தீ: மாது கருகி மாண்டார்

Share:

கோலாலம்பூர், பிப்.6-

கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் ஸ்ரீ திரெங்கானு பொது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பத்தாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் ஓர் இந்தோனேசிய மாது மாண்டார்.

இதில் 50 வயது மதிக்கத்தக்க அந்த மாது, வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.38 மணியளவில் கோலாலம்பூர் செயலாக்க நடவடிக்கை அறை ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி கமாண்டர் இ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

செந்தூல், தீத்தி வங்சா மற்றும் ஜாலான் ஹாங் துவா ஆகிய மூன்று நிலையங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகளுடன் சுமார் 20 வீரர்கள் விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவ்விடத்திற்கு வீரர்கள் சென்றடைந்த போது அந்த பொது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பத்தாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

வீட்டின் நாலாபுறமும் பதவிய தீ, அதிகாலை 1.30 மணியளவில் முழுமையாக கட்டுப்படுத்தப்ட்டது. வீடு 90 விழுக்காடு அழிந்து விட்டதாக யோகேஸ்வரன் தெரிவித்தார்.

குளியல் அறையிலிருந்து மீட்கப்பட்ட மாதுவின் உடல் உரிய நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து