Jul 25, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி தொடரும்: பிரதமர் அன்வார்!
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி தொடரும்: பிரதமர் அன்வார்!

Share:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், எரிபொருள் மானியத்திற்காக ஆண்டுதோறும் பல பில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டு ரோன்95 பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென் ஆகவும், டீசல் விலை 2 ரிங்கிட் 10 சென் ஆகவும் தொடர்ந்து தக்கவைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

2026 தேசிய பயிற்சி வாரத்தின் நிறைவு விழாவில் உரையாற்றியபோது அவர், வெளிநாடுகளிலிருந்து பாதியளவு பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யும் மலேசியா, அனைத்துலகச் சந்தையில் விலை உயர்ந்தாலும் அதன் சுமை மக்களுக்கு வராதவாறு பாதுகாக்க ஆண்டுதோறும் 40 பில்லியன் முதல் 50 பில்லியன் ringgit வரை எரிபொருள் மானியத்திற்காகச் செலவிடுவதாகக் குறிப்பிட்டார்.

Related News