இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தில் ஆள்பார்த்து விசாரணை செய்வதும், நடவடிக்கை எடுப்பதையும் நடப்பு அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டுள்ளார்.தம்மை இலக்காக கொண்டு நடப்பு அரசாங்கம், விசாரணை செய்து வருவதாக முன்னள் பிரதமருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய தலைமைத்துவத்தில் உள்ள அரசாங்கத் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் மலாய்க்காரரர்கள் மற்றும் இஸ்லாம் நலன் சார்ந்த அம்சங்கள் தொடர்பில் தாம் ஒருவரே குரல் எழுப்பி வருவதால் அதனை ஜீராணிக்க முடியாமல் நடப்பு அரசாஙகம் தம்மை இலக்காக கொண்டு, தமது மீது விசாரணை வலையை வீசி வருவதாக முகைதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.








