Dec 3, 2025
Thisaigal NewsYouTube
செப்டம்பர் 30 முதல் ரோன்95 பெட்ரோலின் விலை 1.99 காசுகள் - மலேசியர்களின் தேசப் பற்றைப் பாராட்டும் விதமாக மானிய விலை - பிரதமர் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

செப்டம்பர் 30 முதல் ரோன்95 பெட்ரோலின் விலை 1.99 காசுகள் - மலேசியர்களின் தேசப் பற்றைப் பாராட்டும் விதமாக மானிய விலை - பிரதமர் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

பூடி மடானி ரோன்95 திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல், ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.05 காசிலிருந்து 1.99 காசாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை, பிரதமர் துறை அலுவலக அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதே வேளையில், இந்த மானிய விலைப் பெட்ரோலைப் பெற மலேசியர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தினால் போதும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் போக்குவரத்துத் துறை மற்றும் தேசிய பதிவுத் துறையின் தரவுகளின் அடிப்படையில், சுமார் 16 மில்லியன் மலேசியர்கள் இந்த மானிய விலைப் பெட்ரோலைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இச்சலுகைகள் தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு, மலேசியர்களின் தேசப் பற்றைப் பாராட்டும் மற்றும் அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மலேசியர்கள் மாதத்திற்கு 300 லிட்டர் வரையில், ரோன்95 பெட்ரோலை மானிய விலையில் பெறவுள்ளனர்.

Related News