கோலாலம்பூர், நவம்பர்.18-
நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகள், அதன் அதிகபட்சக் கொள்ளளவிற்கும் அதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளதாக உள்துறை துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, மலேசியாவில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தம் 84,143 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், 6,640 பேர் சிறைக்கு வெளியே உள்ள மறுவாழ்வு மையங்களில் இருக்கிறார்கள் என்றும் டாக்டர் ஷாம்சுல் குறிப்பிட்டுள்ளார்.
சிறைகளின் மொத்த கொள்ளளவான 76,311 கைதிகளையும் தாண்டி, 7,872 கைதிகள் கூடுதலாக இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் நேற்று டாக்டர் ஷாம்சுல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைக்கு வரும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








