Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேரா சுல்தான் உரையைத் தொடர்புப்படுத்தி உள்ளடக்கம் பகிர்வு, ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரா சுல்தான் உரையைத் தொடர்புப்படுத்தி உள்ளடக்கம் பகிர்வு, ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ, ஜூன்.17-

மேன்மை தங்கிய பேரா சுல்தான் உரையைத் தொடர்புப்படுத்தி அருவறுத்தக்க உள்ளடக்கத்தைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதாக ஊடக நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப முன்னாள் அதிகாரி ஒருவர் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

அரிஃப் ஸூல்கர்நாயின் அமீர் முகமட் இமாம் என்ற 50 வயதுடைய அந்த நபர் கடந்த பிப்ரவரி மாதம் இத்தகைய உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொண்டு, மற்றவர்களின் மனதை நோகடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மாட் தர்மிஸி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் தனக்கு எதிரானக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →