Sep 29, 2026
Thisaigal NewsYouTube
"ரோன்95 எண்ணெய் விலையில் உயர்வு இருக்காது - முடிந்தவரை முயற்சிப்போம்" - அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

"ரோன்95 எண்ணெய் விலையில் உயர்வு இருக்காது - முடிந்தவரை முயற்சிப்போம்" - அன்வார் உறுதி

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய சந்தையில் நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும், மலேசியர்களுக்கான ரோன்95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகள் என்ற தற்போதைய விலையில் பராமரிக்க அரசாங்கம் முயற்சி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Hormuz ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளையடுத்து, உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு, மலேசியாவையும் பாதிக்கும் என்றாலும் கூட, பூடி மடானி ரோன்95 திட்டத்தின் கீழ் மானிய விலையிலேயே ரோன்95-ந்தை நிர்வகிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் அருளால் தற்போதைக்கு எண்ணெய் விலையில் அதிகரிப்பு இல்லையென்றாலும் கூட, தவிர்க்க இயலாத சூழ்நிலை ஏற்படும் போது, எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றமானது நமது கைகளில் இல்லை என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அபாயங்களைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக சந்தைகள் எச்சரிக்கை செய்துள்ளன.

மத்திய கிழக்கின் போர் காரணமாக, எண்ணெய் விலை, ரிங்கிட் மற்றும் வர்த்தக ஓட்டங்கள் பாதிக்கக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.

Related News