ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.01-
பினாங்கில் காப்புறுதி குமாஸ்தாவாகப் பணி புரியும் 61 வயது மாது ஒருவர் தொலைப்பேசி உரையாடல் வழி ஸ்கேம் மோசடியில் சிக்கி 6 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
வங்கி அலுவலர் போல் நாடகமாடிய மோசடிப் பேர்வழிகள், அம்மாதுவின் பெயரில் கடன் அட்டை இருப்பதாகக் கூறி அவரை ஏமாற்றியுள்ளனர்.
அம்மாதுவைத் தொலைப்பேசியில் அழைத்து, 14 முறை நடைபெற்ற பணப் பரிமாற்றம் மூலம், 6 லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாது, பின்னர் தனது மகளிடம் இவ்விவகாரத்தைக் கூறிய பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








