May 24, 2026
Thisaigal NewsYouTube
பேய் போல் மாறுவேடமிட்டு மக்களைப் பயத்தில் ஆழ்த்திய பெண் கைது
தற்போதைய செய்திகள்

பேய் போல் மாறுவேடமிட்டு மக்களைப் பயத்தில் ஆழ்த்திய பெண் கைது

Share:

ஜோகூர்,ஆகஸ்ட் 18

ஜோகூர், ஆஸ்டின் ஹைட்ஸ் உத்தாமா சாலையில் பேய் நடமாட்டம் இருப்பதாக கடந்த மூன்று வாரங்களாக சமூக ஊடங்களில் தகவல் பரவலாகி வந்த நிலையில், போலிஸ் அந்த சாலையில் மனநலப் பிரச்சனை உள்ள ஒரு பெண்ணை நேற்று இரவு 10.51 மணிக்கு கைது செய்துள்ளது.

கைதான 31 வயதான அந்த பெண், சம்பந்தப்பட்ட சாலையில் பயணிப்பவர்களைப் பயமுறுத்துவதற்கு பேய் போல் மாறுவேடமிட்டு செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதை தெற்கு ஜொகூர் பாரு போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் ராப் செலமட் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அதோடு, கைதான அந்த பெண் விசாரணைக்காக மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த முடிவுக்காகத் தங்கள் தரப்பு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Related News