Jun 17, 2026
Thisaigal NewsYouTube
கூட்டணியில் நீடிக்க பெர்சத்து விருப்பம்: பாஸ் கட்சி கருத்து
தற்போதைய செய்திகள்

கூட்டணியில் நீடிக்க பெர்சத்து விருப்பம்: பாஸ் கட்சி கருத்து

Share:

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற பெர்சத்து கட்சியின் விருப்பத்தை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார். எனினும், இறுதி முடிவை எடுப்பது பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினர்கள் கைகளில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பெர்சத்து கட்சி பிஎன் கூட்டணியிலேயே நீடிக்கும் என்றும், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் கூட்டணியின் சின்னத்தையே பயன்படுத்தும் என்றும் அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் தெரிவித்திருந்தார்.

பிஎன் அரசியல் விதிமுறைகளின்படி எந்தவொரு தரப்பும் ஒருதலைப்பட்சமாக பெர்சத்து கட்சியை கூட்டணியில் இருந்து நீக்க முடியாது என்றும், அனைத்து முடிவுகளும் கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.

Related News

கூட்டணியில் நீடிக்க பெர்சத்து விருப்பம்: பாஸ் கட்சி கருத்து | Thisaigal News