Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல்

Share:

கிறிஸ்துமஸ் பண்டிகையின் நீண்ட விடுமுறைக்கு பிறகு நகரவாசிகள் வீடு திரும்பத் தொடங்கியிருப்பதால் இன்று செவ்வாய்க்கிழமை பல முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை நெடுஞ்சாலைகளில் மாலை 5.00 மணிக்கு பிறகு வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன என்று எல்எல்எம் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூர் சுங்ஙை பெசி டோல் சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இதேபோன்று Jalan Duta டோல் சாவடியிலும் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதாக பெர்னாமா கூறுகிறது.

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புத்ராஜெயாவிற்கு வடக்கே North – South Expressway Central Link சாலையான Elite ( எலைட் ) நெடுஞ்சாலையின் 31.4 ஆவது கிலோ மீட்டரில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு டிரெய்லர் லோரியினால் அந்த முதன்மை சாலையின் இடது தடத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியிருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் | Thisaigal News