Dec 2, 2025
Thisaigal NewsYouTube
22 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

22 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

Share:

கிள்ளான் வட்டாரத்தில்இரண்டு கேளிக்கை மையங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனைகளில் உபசரணைப் பெண்கள் என்ற போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 22 அந்நிய நாட்டுப் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 22 அந்நிய நாட்டுப் பெண்களும் அடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
27 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 22 பெண்களில் 18 பேர் வியட்நாமை சேர்ந்தவர்கள். இருவர் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

22 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது | Thisaigal News