கோலாலம்பூர், அக்டோபர்.17-
இந்திய சமூகத்தின் நலனுக்காக, பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள அரசாங்கம் 42.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகளில் இலவச டியூஷன் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கல் உள்ளிட்ட பல நன்மைகளும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், மித்ரா மூலம் பள்ளிகளில் பழுது பார்க்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளதாகவும் நேற்று இரவு தனது முகநூலில் அன்வார் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பிரிக்பீல்ட்சுக்கு வருகை புரிந்த அன்வார், மெட்ராஸ் பேக்கரியில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடன் தேநீர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அப்போது, இது குறித்து அவர்களிடம் தான் கலந்து பேசியதாகவும் அன்வார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.