கோத்தா திங்கி, நவம்பர்.16-
இன்று நண்பகல் 1.30 மணியளவில் ஜாலான் சுங்கை ரெங்கிட்-கோத்தா திங்கி சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், முறையே 24, 28 வயதுடைய இளம் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அவர்கள் வந்த மைவி கார், எதிர் திசையில் வந்த unloaded பாம் ஆயில் லாரி மீது மோதியதில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்ததாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் யுசோஃப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, காரில் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கையில் அமர்ந்திருந்த ஆறு மாதக் பெண் குழந்தைக்குத் தலையில் காயம் ஏற்பட்டு, கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவற்படையினர் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் 41(1)-ன் கீழ் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.








