Nov 18, 2025
Thisaigal NewsYouTube
கெந்திங் மலை சாலைக்குக் கட்டண விதிப்பு: உத்தேச பரிந்துரை இன்னும் பெறப்படவில்லை
தற்போதைய செய்திகள்

கெந்திங் மலை சாலைக்குக் கட்டண விதிப்பு: உத்தேச பரிந்துரை இன்னும் பெறப்படவில்லை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.18-

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கெந்திங் மலைக்குச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்கப் போவதாக அறிவித்து இருக்கும் அந்த உல்லாச வாசஸ்தலத்தை நிர்வகித்து வரும் கெந்திங் மலேசியா பெர்ஹாட்டிடமிருந்து பொதுப்பணித்துறை அமைச்சு, இன்னும் எந்தவோர் உத்தேசப் பரிந்துரை அறிக்கையைப் பெறவில்லை என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

கெந்திங் மலைக்குச் செல்லும் சாலை, கெந்திங் மலேசியா பெர்ஹாட்டினால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனியார் சாலையாகும் என்ற போதிலும் அங்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிப்பது தொடர்பில் அந்த தனியார் நிறுவனம், இன்னும் எந்தவோர் அதிகாரத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கெந்திங் மாலை சாலையைப் பராமரிப்பதற்கான தேய்மான செலவு அதிகரித்து வருகின்ற காரணத்தினால் அனைத்து வகையான வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும் என்று கெந்திங் மலேசியா பெர்ஹாட் கடந்த வாரம் அறிவித்து இருப்பது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி இதனைத் தெரிவித்தார்.

Related News