கோலாலம்பூர், செப்டம்பர்.02-
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
அந்த உயர் அதிகாரி மீதான விசாரணை முடிவு தெரியும் வரையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இராணுவப் படையின் உளவுத்துறையைச் சேர்ந்த அந்த அதிகாரியின் பணியிடை நீக்கத்தினால் உளவுத்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும் என்ற அமைச்சர் குறிப்பிட்டார்.








