Sep 28, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
தற்போதைய செய்திகள்

போலீஸ் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

Share:

நாட்டின் 219 ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு பேரா மாநில அளவில் பத்துகாஜா ஸ்ரீ சுப்பிரமணிர் ஆலயத்தில் போலீஸ் தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்றிரவு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பேரா மாநில முழுவதிலிருந்தும் இந்திய போலீஸ் அதிகாரிகள், பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் அதிகாரிகள் பலர் கலத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வு கோலகங்சார் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் சரளநாதன் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

மலேசியாவில் போலீஸ் தினம் ஆண்டுதோறும் மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மலேசியாவில் போலீஸ் படையின் உருவாக்கத்தை குறிக்கிறது.

இந்த கொண்டாடடத்தின் நோக்கம், போலீசாரின் சேவையை பாராட்டுவது மற்றும் அவர்களின் பணிகளை அங்கீகரிப்பது என்றாலும் பல இனம் வாழும் இந்த நாட்டின் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்புடன் வாழ ஆலயத்தில் ஆண்டு தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதாக சரளநாதன் கூறினார்.

இந்தியர்கள் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கேள்விகளில் தொடர்ந்து சிறந்த விளங்க பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் மற்றும் ஒற்றுமையின் அவசியத்தையம் சரளநாதன் வலியுறுத்தினார்.

ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டிற்குப் பின்னர் போலீஸ் துறையில் சேவையாற்றி வருபவர்களுக்கும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் , எஸ் பி. எம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Related News