கோலாலம்பூர், அக்டோபர்.29-
வீடற்றவர்கள் பொது இடங்களில் உறங்குவதைத் தடுக்கும் உட்கட்டமைப்பின் பயன்பாட்டை கோலாலம்பூர் மாநகர மன்றம் ஆய்வு செய்து வருகின்றது.
லண்டன், டோக்கியோ மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது போல், வீடற்றவர்கள் இல்லா உட்கட்டமைப்பைச் செயல்படுத்துவது குறித்து கோலாலம்பூர் மாநகர மன்றம் ஆய்வு செய்து வருவதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த அணுகுமுறை பொது பெஞ்சுகளின் வடிவமைப்பையும் உள்ளடக்கியது என்று குறிப்பிட்டுள்ள அவர், அவை படுத்து உறங்குவதற்கு ஏற்றதாக இல்லாமல் தற்காலிகப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வடிவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இம்முயற்சியின் மூலம் நகர்ப்புறம், அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாறும் என்பதோடு, வீடற்றவர்கள் பொது இடங்களில் உறங்குவதை ஊக்குவிக்காது என்றும் ஸாலிஹா குறிப்பிட்டுள்ளார்.








