Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மலாயா தலைமை நீதிபதியாக ஹஸ்னா ஹஷிம் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாயா தலைமை நீதிபதியாக ஹஸ்னா ஹஷிம் நியமனம்

கோலாலம்பூர், நவ.11-


மலாயா நீதிபதியாக தலைமை டத்தோஸ்ரீ ஹஸ்னா முகமட் ஹஷிம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் காலியாக இருந்து வரும் நாட்டின் தலைமை நீதிபதிக்கு அடுத்து நீதிபரிபாலனத்தில் இரண்டாவது உயர் பதவியான மலாயா தலைமை நீதிபதி பதவி, 65 வயது ஹஸ்னா முகமட் ஹஷிமை கொண்டு நிரப்படவிருப்பதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் முன்னிலையில் அவர் பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்வார் என்று வட்டாரங்கள் மேற்கோள்காட்டின.

மலேசிய நீதிபரிபாலனத்தில் மலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவிருக்கும் மூன்றாவது பெண்மணியாக ஹஸ்னா முகமட் ஹஷிம் திகழ்கிறார். கடந்த 2005 லிருந்து 2007 வரை சித்தி நோர்மாவும், 2018 லிருந்து 2019 வரையில் சஹாரா இப்ராஹிமும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →