Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு அமைந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு அமைந்துள்ளது

புத்ராஜெயா, நவ. 25-


அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் மாணவர்கள் சேர்ப்பானது, கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்டது என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

தேவைகள் அதிகமான கொண்ட துறைகளுக்கு மாணவர்கள் கல்வித் தகுதி, அடிப்படை கூறாக கருத்தில் கொள்ளப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

அரசாங்க பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் சேர்ப்பில் அரசாங்கம் எந்த சூழலில் பாகுபாடு காட்டியது கிடையாது என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

மாணவர் ஒருவருக்கு பொதுப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கத் தவறினால் அதனை இனவாதமாக அல்லது ஒரு தரப்பினருக்கு எதிரான பாகுப்பாடு பிரச்னையாக இருக்கக்கூடாது என்பதை அவர் விளக்கினார்.

அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றால் அந்த மாணவருக்கு அரசாங்கப் பொது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும் என்பது திண்ணமாகும் என்பதையும் டாக்டர் ஜம்ரி தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →