Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக், லாபுவான் பயணத்திற்கு கட்டத்தில் உதவித்தொகை
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக், லாபுவான் பயணத்திற்கு கட்டத்தில் உதவித்தொகை

Share:

பண்டிகை நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சபா, சரவாக், லாபுவான் ஆகிய வழித்தடங்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்கின்றவர்களுக்கு விமான டிக்கெட் கட்டணத்தில் அரசாங்கம் உதவித் தொகையை வழங்கவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவிலிருந்து ஒரு வழிப்பயணத்திற்கு விமானக்கட்டணத்தில் 599 வெள்ளிக்கும் கூடுதல் தொகைக்கு டிக்கெட் வாங்குவார்களேயானால் அவர்கள் உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த கட்டண சலுகை பொருந்தும். டிசம்பர் 22,23,24 ஆகிய மூன்று தினங்களில் பயணம் செய்கின்றவர்கள், அரசாங்கத்தின் உதவித் தொகையை பெறும் இந்த சிறப்பு சலுகை, நாளை பின்னிரவு 12.01 மணிக்கு தொடங்குகிறது என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News