Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லை, பெண் நிருபர் போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லை, பெண் நிருபர் போலீசில் புகார்

Share:

சுங்கை பகப்,ஜூலை 05-

பினாங்கு, சுங்கை பகப் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், தமக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பெண் ஊடகவியலாளர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

நிபோங் டேப்ல சுங்கை கேசில் என்ற இடத்தில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, பொது மக்களை சந்திக்கும் நிகழ்வில் அந்த தொண்டர் தனது பின்புறம் நின்று கொண்டு அருவருக்கத்தக்க செயலைப் புரிந்ததாக அந்த பெண் நிருபர் தனது போலீஸ் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தேகப் பேர்வழியின் செயலை கண்டு அங்கு இருந்தவர்களும் அந்நபரை வழிமறித்து விசாரித்ததாகவும், அதற்கு அந்நபர், அத்தகைய அபாச சேட்டையைப் புரியவில்லை என்று மறுத்ததாக அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே விசாரணைக்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மத் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்