Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ரிங்.10 லட்சம் வெள்ளி காணமல் போன சம்பவம்: இருவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரிங்.10 லட்சம் வெள்ளி காணமல் போன சம்பவம்: இருவர் கைது

அம்பாங், நவ.8-


பத்து லட்சம் ரிங்கிட் காணாமல் போன சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹசான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

52 வயது ஒரு ஆண் பாதுகாவலரும், 38 வயது ஒரு பெண் பாதுகாவலரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரையும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரையில் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இந்த இருவர் மீதும் ஏற்கனவே எந்தவொரு குற்றப்பதிவும் இல்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அம்பாங், அம்பாங் போயின்ட் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பாதுகாவல் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் போது 10 லட்சம் வெள்ளி காணாமல் போனதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பணம், பின்னர் சாலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →