Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் சேவல் சண்டை கும்பலைச் சேர்ந்த 43 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் சேவல் சண்டை கும்பலைச் சேர்ந்த 43 பேர் கைது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-

ஜோகூர், கோத்தா திங்கி, கம்போங் மெலாயு பண்டான் என்ற இடத்தில் நேற்று காவல் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் இரு சட்டவிரோதச் சேவல் சண்டை கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.

அவர்களிடமிருந்து உயிருடன் 34 சேவல்களையும், இறந்த நிலையில் 12 சேவல்களையும், 22, 489 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து ஜோகூர் மாநில காவல் துறைத் தலைமை ஆணையர் டத்தோ அம்துல் ரஹ்மான் அர்சாட் கூறுகையில், முறியடிக்கப்பட்ட அவ்விரு கும்பல்களில் 15 வெளிநாட்டுப் பிரஜைகளும், 28 உள்ளூர்வாசிகளும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Related News