ஷா ஆலாம், செப்டம்பர்.22-
சிலாங்கூர் ராஜா மூடா, தெங்கு அமீர் ஷாவிற்கு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.
சிக் அஃப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஸிஸ் என்பவரை ராஜா மூடா கரம் பிடிக்கவிருக்கிறார்.
தமது புதல்வரின் திருமண வைபவம் குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவித்து இருப்பதாக சிலாங்கூர் சுல்தானின் அந்தரங்க செயலராளர் டத்தோ முகமட் முனிர் பானி ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.
மணமக்களின் திருமணம், கிள்ளான், இஸ்தானா ஆலாம் ஷா, அரண்மனை பள்ளிவாசலில் நடைபெறவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








