Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர் சங்காட் பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர தங்கும்விடுதியை மையமாகக் கொண்டு செயல்பட்டதாகக் கூறப்படும் விபச்சார கும்பலை முறியடித்த மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், 152 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளனர்.

பொதுமக்களின் புகார்கள் மற்றும் இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை கண்காணிப்பின் அடிப்படையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

புத்ராஜெயா தலைமையக அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 131 குடிநுழைவுத்துறை அதிகாரிகளும், நான்கு சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து, அந்த தங்கும் விடுதி மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பொழுதுபோக்கு மையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 243 பேர் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் 194 பேர் வெளிநாட்டவர்களும், 49 பேர் மலேசியர்களும் ஆவர்.

இந்நிலையில், அவர்களில் 152 பேர் முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்