Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத் திருத்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத் திருத்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை.30-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சட்டத் திருத்தங்கள் மீதான மீள் ஆய்வு, தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சொஸ்மாவின் சட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் உத்தேசச் சட்டவிதித் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பின்னர் அந்தச் சட்டத் திருத்தங்கள் மீதான மசோதா, விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சைஃபுடின் விளக்கினார். சொஸ்மா சட்டம், குற்றவாளிகளுக்கு அல்லது விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்க அனுமதி மறுப்பது குறித்து மக்களிடையே பரவலான அதிருப்தி நிலவியதைத் தொடர்ந்து அந்த கொடுங்கோல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related News