குவாந்தான், பிப்ரவரி.25-
குவாந்தானிக் மதம், இனம் மற்றும் அரச பரிபாலனம் தொடர்புடைய 3R குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட தனது மகனுக்கு எதிராகத் தந்தை ஒருவரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
21 வயதுடைய உயர்கல்விக்கூட மாணவர் , தனது 'Threads' சமூக வலைதளப் பக்கத்தில் புனித குர்ஆனை இழிவுபடுத்தும் வகையிலான புகைப்படத்தைப் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த 50 வயதுடைய அவரது தந்தை, இன்று காலை தனது மகனை நேராகக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
தனது மகனின் செயலுக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிய தந்தை, இந்தப் பதிவினால் தனது மகனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற கவலையினால் இந்தப் புகாரை அளித்துள்ளதாகக் போலீஸ் துறையிடம் தெரிவித்துள்ளார்.








