அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை ஒத்திவைத்துள்ள மனித வள அமைச்சு, புதிய தொழிலாளர்கள் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கைப் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து மீளாய்வு செய்யவிருப்பதாக அதன் அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பது மீதான தளர்வு திட்டத்தின் கீழ் புதிய தொழிலாளர்களைத் தருவிக்கும் திட்டத்தை மனித வள அமைச்சு கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அனுமதியை அரசாங்கம் விருப்பம் போல் வழங்கிவிட முடியாது என்று சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related News

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்

ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நலன்கள்


