சவூதி அரேபியா, ரியாத்தில் நடைபெற்ற ஆசியான் - வளைகுடா ஒத்துழைப்பு மீதான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சவூதி அரேபியாவின் பட்டத்து இளரசர் முகமட் சல்மான் னை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது பாலஸ்தீன விவகாரம் மற்றும் மலேசியாவிற்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையிலான இரு வழி உறவுகள் குறித்து இளவரசர் சல்மான் னுடன் பிரதமர் விவாதித்ததாக தெரவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அன்வார், சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரியாத்தை சென்றடைந்தார்.








