Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!
தற்போதைய செய்திகள்

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

Share:

உங்கள் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா?

அப்படியானால், மேய்ச்சி முத்ரா ரோடுஷோ – நெகிரி பகாங் நிகழ்வை தவறவிடாதீர்கள்!

அரசு வழங்கும் தொழில் நிதியுதவி, மானியங்கள், ஊக்கத்தொகைகள் மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் பற்றிய சமீபத்திய தகவல்களை, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளின் அதிகாரிகளிடமிருந்து நேரடியாக அறிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பு!

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி, சனிக்கிழமை, பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை, பகாங் மாநிலம், தெமர்லோவில் அமைந்துள்ள ஹோட்டல் கிரீன் பார்க் அரங்கில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அங்கு நீங்கள் நேரடியாக எஸ்எம்இ வங்கி, டெகுன் நேசனல், அமானா இக்தியார் மலேசியா, வங்கி ராக்யாட், எஸ்எம்இ கார்ப் மலேசியா, மற்றும் மலேசிய கூட்டுறவு ஆணையம் ஆகியோரிடமிருந்து நம்பகரமானத் தகவல்களைப் நேரடியாக பெறலாம்.

இந்த நிகழ்வை பகாங் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை, கபூன் திவான் பெர்நீயாகான் டான் பெரின்டுஸ்ட்ரியன் இந்தியா மலேசியா-வின் ஒத்துழைப்புடன் நடத்துகிறது.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள எண்களை தொடர்புகொள்ளலாம்.

இன்று நீங்கள் எடுக்கும் ஒரு சிறிய முயற்சி… நாளை ஆயிரம் புதிய வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கலாம்!

மேய்ச்சி முத்ரா ரோடுஷோ – நெகிரி பகாங் நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு, உங்கள் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு புதிய திசையை உருவாக்குங்கள்.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது