Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மலையேறும் நடவடிககையில் மாது மரணம்
தற்போதைய செய்திகள்

மலையேறும் நடவடிககையில் மாது மரணம்

Share:

மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாது ஒருவர், குளவிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் நே​ற்று மாலை 6 மணியளவில் பினாங்கு, புக்கிட் கம்பீர் பகுதியில் நிகழ்ந்தது. குளவிகளால் தாக்கப்பட்டு கடும் பாதி​ப்புக்கு ஆளான 58 வயதுடைய அந்த மாதுவை பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் மரணமுற்றதாக பினாங்கு, திமூர் லாவுட் மாவட்ட போ​லீஸ் தலைவர் வி. சரவணன் தெரிவித்தார்.

அந்த மாது குளவிகளால் தாக்கப்பட்டு மரணமுற்றதை மருத்துவர்கள் உறுதி செய்த வேளையில் தடயவியல் சோதனைக்காக சடலம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சரவணன் குறிப்பிட்டார்.

Related News