கோலாலம்பூர், நவம்பர்.15-
தைவானைச் சேர்ந்த ஊடகப் பிரபலமான Hsieh Yu Hsin, தன் கண் முன்னே மரணமடைந்ததாக பிரபல ராப் பாடகர் Namewee தெரிவித்துள்ளார்.
அவரது உயிரைக் காப்பாற்ற தாம் எவ்வளவோ போராடியும் கூட, அது பலனளிக்காமல் போய்விட்டதாக நேற்று ஜாமீனில் வெளிவந்த பின்னர், அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Hsieh மரணத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த 9 நாட்களாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த Namewee நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.
தடுப்புக் காவலில் முதல் இரண்டு நாட்கள், தன்னை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 அதிகாரிகள் விசாரணை செய்ததாகக் குறிப்பிட்டுள்ள Namewee, கிட்டத்த 15 மணி நேரங்கள் அது நீடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின் போது பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








