Oct 14, 2026
Thisaigal NewsYouTube

இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களுக்கான அமைச்சை உருவாக்க சட்டத்தில் இடம் உண்டு – வழக்கறிஞர் Bastian Pius Vendargon பேச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.16-

இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஓர் அமைச்சகத்தை நிறுவுவதை மலேசிய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்யவில்லை என்று அரசியலமைப்பு வழக்கறிஞர் Bastian Pius Vendargon கூறினார். அரசியலமைப்பின்படி, இஸ்லாம் மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமாக இருந்தாலும், மற்ற சமயங்களும் சுதந்திரமாக கடைபிடிக்கப்படலாம் எனச் சுட்டிக் காட்டினார் அவர்.

முன்னதாக, இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்ற ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுயின் கோரிக்கைக்கு PAS , MMLA என்ற அமைப்பு ஆகியன எதிர்ப்பு தெரிவித்ததற்குப் பதிலளிக்கும் வகையில் Bastian Pius Vendargon இவ்வாறு கூறினார். இந்த எதிர்மறை கருத்தானது 'சட்டப்பூர்வமாக இல்லாமல் அரசியல் அடிப்படையிலேயே இருப்பதாக Bastian Pius Vendargon கூறினார்.

சில வழக்கறிஞர்கள் இஸ்லாம், இஸ்லாம் அல்லாத சமயங்களின் உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகளையும் நீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி, இந்த விவகாரத்தில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்கள் ஏற்கனவே தேசிய ஒற்றுமை அமைச்சரின் அதிகார வரம்பிற்குள் இருப்பதாகவும், மத நல்லிணக்கக் குழு போதுமானது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்