Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அலங்கார மீன்கள் விற்பனைக் கடை தீயில் அழிந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அலங்கார மீன்கள் விற்பனைக் கடை தீயில் அழிந்தது

கோலாலம்பூர், டிச. 7-


கோலாலம்பூர், ஜாலான் புடுவில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் அலங்கார மீன்கள் விற்பனைக் கடை அழிந்தது. இந்த தீ விபத்து குறித்து இரவு 9.38 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்புப்படையின் உதவி கமாண்டர் சலேதுல் அஸ்மிர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜாலான் ஹாங் துவா, ஜாலான் துன் ரசாக் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 32 வீரர்கள் தீணை அணைப்பதில் கடுமையாக போராடியதாக அவர் குறிப்பிட்டார்.

தீ நாலாபுறமும் கொழுந்து விட்டு எரிந்ததால், தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுப்பதில் வீரர்கள் தீவிர கவனம் செலுத்தினர். இவ் விபத்தில் அந்த அலங்கார மீன்கள் விற்பனை கடை 100 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →