இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்தோனேசியா தென் சுமத்ரா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், மலேசியாவில் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ர ஜெயா, நெகிரி செம்பிலன், மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. 7.0 ரிக்டர் அளவில் பதிவுசெய்யப்பட்ட அந்த நிலநடுக்கம் கடலின் 49 கிலோமீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்டுள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இந்தோனேசிய நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் பின் இரண்டு மணி நேரத்திற்கு அதன் அரசாங்கம் அந்த சுனாமி எச்சரிக்கையை மீட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.








