கிள்ளான், செப்டம்பர்.05-
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கிள்ளான், பண்டமாரானில் உருவான குடியிருப்புப் பகுதியான கம்போங் பாபானில் மூன்று தலைமுறையினராக வாழ்த்து வரும் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு மேம்பாட்டாளர் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியிருப்பதை ஆட்சேபித்து அப்பகுதி மக்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
தங்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது சட்டவிரோதமானது என்பதுடன் எந்த வகையிலும் நியாயமில்லை என்று குடியிருப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
தாங்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க, தாங்கள் செய்து கொண்ட மேல்முறையீடு இன்னமும் அப்பீல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மேம்பாட்டாளர் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியிருப்பதை மக்கள் கடுமையாக ஆட்சேபித்துள்ளர்.
மேம்பாட்டாளரின் இந்த அராஜகப் போக்கிற்கு எதிராக தாங்கள் 66 போலீஸ் புகார்கள் செய்து இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.








