Jun 6, 2026
Thisaigal NewsYouTube
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சென்றடைய களத்தில் இறங்கியது KUSKOP - ஸ்டீவன் சிம்
தற்போதைய செய்திகள்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சென்றடைய களத்தில் இறங்கியது KUSKOP - ஸ்டீவன் சிம்

Share:

ஜார்ஜ் டவுன், மே.24

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நேரடியாக ஆலோசனைகளையும் நிதி உதவிகளையும் வழங்க தனது நான்கு முக்கிய நிதி நிறுவனங்களை களமிறக்கியுள்ளது. இதன்படி, தெக்குன் நேஷனல், அமானா இக்தியார் மலேசியா, எஸ்எம்ஈ பேங்க், பேங்க் ரக்யாட் ஆகிய நிறுவனங்கள் நாடு தழுவிய நிலையில் நடைபெறும் ஜுவாலான் மடானி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நேரடியாகத் தொழில்முனைவோரை அணுகி உதவி வழங்கி வருகின்றன.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுறுத்தலின்படி, வாடிக்கையாளர்கள் அலுவலகத்திற்கு வருவதை எதிர்பாராமல், அமைச்சே தொழில்முனைவோரைத் தேடிச் சென்று உதவிகளை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்குக் கடன் தவணைத் தள்ளிவைப்பு, கடன் மறுசீரமைப்பு போன்ற சலுகைகளை வழங்கவும் அமைச்சகம் தயாராக இருப்பதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதிபடக் கூறினார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்