May 4, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது: விசாரணைக்கு பாஸ் கட்சி தயார்
தற்போதைய செய்திகள்

திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது: விசாரணைக்கு பாஸ் கட்சி தயார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.22-

திரங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் அதிகார முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளைகளை அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியமர்த்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது போன்ற எந்தவொரு விசாரணைக்கும் தங்கள் கட்சி எப்போதும் தயாராக இருப்பதாக பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாநிலத் தலைவர்கள் வரை அனைவரும் வெளிப்படையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அவர் உறுதிப்படக் கூறியுள்ளார்.

Related News