Jun 9, 2026
Thisaigal NewsYouTube
பெர்சாத்துவுடனான அரசியல் உறவை முறித்துக் கொள்வதாக பாஸ் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பெர்சாத்துவுடனான அரசியல் உறவை முறித்துக் கொள்வதாக பாஸ் அறிவிப்பு

Share:

பெர்சாத்து கட்சியுடனான அரசியல் கூட்டணியை முறித்துக்கொள்வதாக பாஸ் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியானது இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை பாதித்ததாக குற்றஞ்சாட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில், பெர்சாத்துவுடனான உறவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஹாடி ஆவாங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெர்சாத்துவுக்குப் பதிலாக மாநிலத் தேர்தல்கள் மற்றும் 16-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளை பாஸ் மேற்கொள்ளும் என்றும், அதன் நோக்கம் ‘உம்மாவை ஒன்றிணைப்பது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வியாளர்கள், தொழில்முறை நிபுணர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாஸ் கட்சியில் இணைவதை கட்சி வரவேற்கிறது என்றும் ஹாடி ஆவாங் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே 22-ஆம் தேதி, பெர்சாத்துவுடனான உறவை பாஸ் மறுபரிசீலனை செய்து வருவதாகவும், தேவையெனில் முகிதீன் யாசின் தலைமையிலான அந்தக் கட்சியின்றி 16-வது பொதுத்தேர்தலை பாஸ் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மாரா கல்லூரிகளில் உளவியல் ரீதியிலான பகடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை /  "யூ டச், யூ கோ” என்ற புதிய நடவடிக்கை அறிமுகம்

மாரா கல்லூரிகளில் உளவியல் ரீதியிலான பகடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை / "யூ டச், யூ கோ” என்ற புதிய நடவடிக்கை அறிமுகம்

3 பிஎம்டபிள்யூ கார்களில் வந்து கேபிள் திருட்டில் ஈடுபட்ட 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

3 பிஎம்டபிள்யூ கார்களில் வந்து கேபிள் திருட்டில் ஈடுபட்ட 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

 "முகைதீன் யாசினை மீண்டும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவராக்குங்கள்" - பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினர் கோரிக்கை

"முகைதீன் யாசினை மீண்டும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவராக்குங்கள்" - பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினர் கோரிக்கை

மலாக்காவில் முன்னாள் கணவரின் அந்தரங்க காணொளிகளை பரப்பிய பெண்ணுக்கு அபராதம்

மலாக்காவில் முன்னாள் கணவரின் அந்தரங்க காணொளிகளை பரப்பிய பெண்ணுக்கு அபராதம்

சமூகப் பாதுகாப்பு அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதில் மலேசியா உறுதி - அமைச்சர் ரமணன் தகவல்

சமூகப் பாதுகாப்பு அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதில் மலேசியா உறுதி - அமைச்சர் ரமணன் தகவல்

அதிரடி ஒப்பந்தங்களுடன் ஜப்பானில் கால்பதித்த பிரதமர் அன்வார்: மிரளும் உலக அரசியல் அரங்கம்

அதிரடி ஒப்பந்தங்களுடன் ஜப்பானில் கால்பதித்த பிரதமர் அன்வார்: மிரளும் உலக அரசியல் அரங்கம்