Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தவறாக வியக்கியாணப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

தவறாக வியக்கியாணப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் கூறுகிறார்

Share:

நெகிரி செம்பிலான், நீலாயில் நடைபெற்ற மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்வின் போது தம்மிடம் திறம்பட கேள்விகளை கேட்ட 18 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கைப்பேசி எண்ணை, நகைச் சுவையாக கேட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின், அந்த எதார்த்தமான செயல், தவறாக வியாக்கியயாணப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த மாணவியின் திறமையை வெகுவாக பாராட்டிய பிரதமர் அன்வார் , “நான் மட்டும் இளைஞனாக இருந்திருந்தால் நிச்சயம் உங்களின் கைப்பேசி எண்ணை கேட்டு இருப்பேன் என்று அந்த மாணவியைப் பார்த்து வேடிக்கையாக கூறி, அங்கிருந்த தமது துணைவியார் வான் அஸிஸாவை நோக்கி புன்முறுவலிட்டு, நகைச்சுவை செய்ததை சிலர் தவறாக வியக்கியாணப்படுத்தி வருவதாக ஃபட்லினா சிடெக் குற்றஞ்சாட்டினார்.

Related News