Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பெலங்கை தொகுதியில் மூன்று பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

பெலங்கை தொகுதியில் மூன்று பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

Share:

பகாங், பெலங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அந்த மூன்று பள்ளிகளுக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டை துணை கல்வி லிம் ஹுய் யிங் அறிவித்தார்.

இதில் லாடாங் ரென்ஜோ தமிழ்ப்பள்ளிக்கு 50 ஆயிரம் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக லிம் ஹுய் யிங்குறிப்பிட்டார். பகாங் மாநிலத்தில் அரசாங்கத்தின் பகுதி உதவிப் பெற்ற பள்ளிகள் என்று வகைப்படுத்தப்பட்டள்ள 20 தமிழ்ப்பள்ளிகளுக்கு 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று பெலங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று பள்ளிகளுக்கு வருகைப் புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் லிம் ஹுய் யிங் இதனை தெரிவித்தார்.

Related News