May 5, 2026
Thisaigal NewsYouTube
இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

கடந்த 24 மணி நேரத்தில் இனவாதத் தூண்டல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட போலித் தகவல்களை பரப்பிய 40-க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகளையும், சுமார் 10 டிக்டாக் கணக்குகளையும் மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அடையாளம் கண்டுள்ளது.

தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இது குறித்து கூறுகையில், இந்திய மற்றும் மலாய் இனத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது போன்ற ஒரு வீடியோ, திட்டமிடப்பட்ட முறையில் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

"ஓர் இந்தியக் கும்பல் மலாய் நில உரிமையாளரைக் காயப்படுத்தியதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. இதில் இனவாதக் கூறுகளைப் புகுத்த முயற்சி நடந்துள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

அடையாளம் காணப்பட்டப் பதிவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான வீடியோவையும், ஒரே விதமான வாக்கியங்களையுமே பயன்படுத்தியுள்ளன. இது திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது இதன் மூலம் உறுதியாகிறது என்று டத்தோ ஃபாமி தெரிவித்தார்.

இந்தத் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டில் இனவாத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்க முயலும் எந்தவொரு முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்படாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Related News