கோலாலம்பூர், அக்டோபர்.01-
பிலிப்பைன்ஸ் Leyte தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.59 மணியளவில் 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சபா மாநிலம் சண்டாக்கான் பகுதிகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் Ormoc-இல் இருந்து வட மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில், இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தினால் மலேசியாவிற்கு சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என்பதையும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.








