கோலாலம்பூர், அக்டோபர்.15-
கோலாலம்பூர், கெப்போங் உட்பட சில பகுதிகளில் இன்று மாலையில் மின்சார வியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீர்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் மின்சார விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஎன்பியின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான டிஎன்பி கேர் லைன் தெரிவித்துள்ளது.








