கோலாலம்பூர், அக்டோபர்.09-
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கப்பட்ட சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி வரை 15 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் பலன் பெற்றுள்ளனர் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மைகாட் அட்டையின் மூலம் தலா 100 ரிங்கிட் வழங்கப்பட்ட சாரா உதவித் திட்டத்தில் அதிகமான மக்கள், பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்துள்ளனர் என்று அது குறிப்பிட்டுள்ளது.
சாரா உதவித் திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 22 மில்லியன் மக்களில் இதுவரையில் 71 விழுக்காட்டினர் 1.34 பில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக பொருட்களை வாங்கியதற்கான பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்று தரவுகள் காட்டுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.








