மாச்சாங், நவம்பர்.13-
எல்லைப் பகுதியில் எந்தவொரு நுழைவாயிலும் செல்லும் போது அல்லது வெளியேறும் போது அதிகாரிகளை நோக்கிக் கையை உயர்த்தி விட்டு, வாகனமோட்டிகள் பயணிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.
பிரமுகர்கள் அல்லது விஐபி அந்தஸ்துக்குரியவர்கள் மற்றும் பொதுச்சேவைத் துறையில் உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள் சிலர் எந்தவொரு பயண ஆவணமின்றி, அதிகாரிகளை நோக்கி கையை உயர்த்திக் காட்டி விட்டு பயணிக்கும் தந்திரத்தை இன்னமும் கையாண்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்டவர் விஐபியாக இருந்தாலும் கையை உயர்த்திக் காட்டி விட்டுச் செல்லும் முறை இனி இருக்காது. அனைவரும் தங்களின் செல்லத்தக்கக் கடப்பிதழைப் பரிசோதனைக்கு உட்படுத்தியப் பின்னரே எல்லையைத் தாண்ட முடியும் என்று டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்தார்.








