முதியவர் ஒருவரை கொலை செய்ததாக காதல் ஜோடிக்கு எதிராக மலாக்கா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 24 வயது முஹம்மாட் ராரிஸ் அஹ்மாட் ஜமாலுடின் அவரின் காதலியான 34 வயது நூர்பைசுரா முஹமட் ஃபுஅட் என்ற அந்த காதல் ஜோடி, மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணியளவில் மலாக்கா, ஆயர் குரோ, ஜாலான் கபாம் என்ற இடத்தில் 71 வயது தான் கியு செங் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த காதல் ஜோடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


