Oct 1, 2026
Thisaigal NewsYouTube

1 கோடி ரிங்கிட் முதலீட்டில் முறைகேடு – 2 சகோதரர்கள் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
1 கோடி ரிங்கிட் முதலீட்டில் முறைகேடு – 2 சகோதரர்கள் தடுப்புக் காவல்

சுமார் 1 கோடி ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டு நடவடிக்கையில் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இரு சகோதரர்கள், எஸ்.பி.ஆர்.எம். மூலம் ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘டத்தோ ஸ்ரீ’, ‘டத்தோ வீரா’ பட்டங்களை கொண்ட 40 மற்றும் 50 வயதுடைய இருவரும், நேற்று இரவு புத்ராஜெயா எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது கைது செய்யப்பட்டனர்.

அவர்களை வரும் 6ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2020 ஆம் ஆண்டு இறுதியில், கல்வி சார்ந்த அறக்கட்டளை அதிகாரி ஒருவருடன் இணைந்து, 1 கோடி ரிங்கிட் முதலீட்டை தங்களில் ஒருவரின் சகோதரருக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனத்துக்கு வழங்கியதாக இருவரும் சந்தேகிக்கப்படுகின்றனர்.

விசாரணையின் தொடர்ச்சியாக 15 சொகுசு கார்கள், 12 உயர் ரக மோட்டார் சைக்கிள்கள், ஐந்து விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், மூன்று வளையல்கள் மற்றும் சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு எஸ்.பி.ஆர்.எம். சட்டம் 2009, பிரிவு 23-ன் கீழ் விசாரிக்கப்படுவதாக அதன் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →